வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (15:41 IST)

மாமூல் கேட்டு தாக்கிய அதிமுக பிரமுகர்! – புகார் அளித்த கடைக்காரர்!

சென்னையில் அடகுக்கடை ஒன்றில் மாமூல் கேட்டு அதன் உரிமையாளரை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள லைட்ஸ் காலணியை சேர்ந்தவர் ஐஸ் ஹவுஸ் மூர்த்தி. அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள இவர் அங்குள்ள கடைகளில் அடிக்கடி மாமூல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியாக டாக்டர் பெசண்ட் சாலையில் உள்ள அடகுக்கடை ஒன்றில் மூர்த்தி மாமுல் கேட்டுள்ளார்.

மூர்த்தி 500 ரூபாய் மாமூல் கேட்ட நிலையில் கடை உரிமையாளர் சுத்ராராம் 200 ரூபாய் மட்டுமே தந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு சுத்ராராம் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.