மன் கீ பாத் புகழ் சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்!

Madurai Mohan
Prasanth Karthick| Last Modified புதன், 23 செப்டம்பர் 2020 (08:35 IST)
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமரின் பாராட்டை பெற்ற மதுரை சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமப்பட்டபோது பிரதமரின் நிதி கணக்கிற்கு தன் மகள் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை வழங்கினார் மோகன். இதனால் பிரதமர் தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் அவரை புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த மோகன் மதுரையை சேர்ந்த கங்கை ராஜன் என்பவருக்கு கடன் கொடுத்திருந்ததாக தெரிகிறது. அவசர மருத்துவ செலவுக்காக ரூ.30 ஆயிரம் கடனாக வாங்கிய கங்கை ராஜன் அதை வட்டியுடன் செலுத்திய பின்னரும் அதிக வட்டி கேட்டு மோகன் மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :