ஸ்டாலினுக்கு விவசாயம்னா என்னன்னு தெரியுமா? – எடப்பாடியார் சுளீர் கேள்வி
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து ஸ்டாலின் பேசிவருவதற்கு எதிராக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதா குறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் மசோதாவிற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளதாக கூறியுள்ள முக ஸ்டாலின், இனிமேல் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என கூறிக்கொள்ள கூடாது என கூறியுள்ளார்.
முக ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? வேளாண் மசோதாக்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மக்களுக்கு பலனளிக்கக்கூடியவை, அதன் சரத்து தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். நான் ஒரு விவசாயியாக இருப்பதால், விவ்சாயிகளுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும்” என கூறியுள்ளார்.