1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (09:52 IST)

உக்ரைன் படையெடுப்பு எதிரொலி… ரஷ்ய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி!

ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை மேற்கொண்டு வருவதால் அந்த நாட்டுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் இப்போது ரஷ்யாவின் பணமதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்து.  1 டாலருக்கு நிகரான மதிப்பு இப்போது 85 ரூபிளாக அதிகமாகியுள்ளது.