செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (19:41 IST)

ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்தவர்கள் கைது...

திருப்பூரில் வசித்து வரும் சதீஸ் மற்றும் ராஜ்குமார் இருவரும் நடுத்தர வர்க்க மக்களை குறிவைத்து 1000 ரூபாய் கொடுத்தால் 2000 ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்களிடம் யாரேனும் கேட்டால் தாங்கள் சமூக அமைப்பில் இருந்து வருவதாகவும் உதவி செய்யும் தொண்டுள்ளத்துடன் இதை செய்துவருவதாகவும் கூறுயுள்ளனர்.
 
ஒருசில மக்கள் 1000 ரூபாய் கொடுத்து 2000 ரூபாய் கொடுத்தாலும் சந்தேகம் அடைந்தனர். இதில் கரூன் என்பவர் இவர்கள் இருவரைக் குறித்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
 
போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில்  இருவரும் வீராணம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
 
மக்களிடம் ரூபாய் 1000 பெற்றுக் கொண்டு ரூபாய் 2000 நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளனர் என்று விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.