புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (12:02 IST)

சட்டக்கல்லூரி மாணவியுடன் உல்லாசம்: போலீஸ் அதிகாரி அதிரடி கைது

பஞ்சாப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டக்கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸிடம் செல்லலாம். ஆனால் போலீஸாலேயே பிரச்சனை என்றால் யாரிடம் செல்வது.
 
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரந்தீர் சிங் உப்பல். இவருக்கும் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
 
இந்நிலையில் ரந்தீர் அந்த பெண்ணை, தனது வீட்டிற்கு வரவழைத்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் போலீஸார் ரந்தீர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.