தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்...சத்யமூர்த்தி பவனில் பரபரப்பு
- காங்கிரசில் சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் கட்சி மாறுவார்கள்: முதல்வர் தகவல்
- குளிர்கால கூட்டத் தொடரில் ராகுல்காந்தி பங்கேற்பாரா? காங்கிரஸ் தகவல்
- 6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று: காங்கிரஸ் பொதுச்செயலாளர்
- ராஜீவ் கொலைவழக்கு: ''6 பேர் விடுதலை'' குறித்து சீமான், டாக்டர் ராமதாஸ் டுவீட்
காங்கிரஸ் அலுவலகத்தில் அடிதடி: எம்.எல்.ஏ சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா?
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் அடிதடி சண்டை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த அடிதடி மோதலுக்கு நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி சண்டை உச்சகட்டத்தை சென்றுள்ள நிலையில் கட்சியின் தொண்டர்கள் அதனை மிகவும் வருத்தத்துடன் பார்த்து வருகின்றனர்.
Edited by Siva
