வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (16:29 IST)

6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று: காங்கிரஸ் பொதுச்செயலாளர்

Congress
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் பேரறிவாளன் போலவே மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் இதுகுறித்து மசோதா இயற்றிய தமிழக அரசு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது
 
ஆனால் கவர்னர் இந்த மசோதாவின் மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தியதையடுத்து சுப்ரீம் கோர்ட் 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது 
 
இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி 6 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து கூறுகையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது தவறான முடிவு என்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran