திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (07:39 IST)

அண்ணாமலை ஒரு காலி பாத்திரம்..திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சனம்..!

bharathi
திமுக பைல்ஸ் இரண்டாம் பாகத்தை நேற்று வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்த ஆதாரங்களையும் அவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திமுக தரப்பில் பரபரப்பை ஏற்பட்டுள்ள நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 
 
அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. நான் கூட சொல்லலாம் அண்ணாமலை ரூ. 2,500 கோடிக்கு பினாமி என்று ஆனால் அதனை நாம் நிரூபிக்க வேண்டும். திமுக எதையும் சந்திக்க தயார்.
 
அண்ணாமலை ஒரு காலி பாத்திரம் . மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே இது போன்ற புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இந்த புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, திமுகவிற்கு இதனால் எந்த அவப்பெயரும் ஏற்படாது
 
திமுகவினர் மீது போட்ட அனைத்து வழக்கையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறோம். நாங்கள் எதையும் சந்திக்க தயார்’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva