ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (16:33 IST)

அண்ணாமலையின் நடைப்பயணம்.. ஓபிஎஸ்-க்கு அழைப்பு இல்லையா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் இந்த பயணத்தில் கலந்து கொள்ள  கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
 
அண்ணாமலை நடைபயணத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஏ சி சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆனால் ஓ பன்னீர் செல்வத்திற்கு இதுவரை அண்ணாமலை அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி 234 தொகுதிகளிலும் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran