புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (17:04 IST)

ரூ.6000 நிவாரணம்.. ரேசன் கார்டு இல்லாதவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு..!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நேரில் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து சென்னையில் உள்ள அனைவருக்கும் ரூபாய் 6000 வழங்கப்படும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சில பகுதி மக்களுக்கு மட்டும் 6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

ஆய்வுக்கு பின்னர்  ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத்தொகை ரூபாய் 6000 வழங்கப்படும் என்பதை குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran