1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in some places of Chennai

சட்டென மாறிய வானிலை.. சென்னையின் பல பகுதிகளில் மழை..!

மழை
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்த நிலையில் சற்றுமுன் திடீரென வானிலை மாறி சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம்,  தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  


மிதமான மழை காரணமாக குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஆனால் அதே நேரத்தில் பெரிய மழை இல்லை என்பதால் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் தமிழகத்தில் சென்னை உள்பட  சில மாவட்டங்களில் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜல்லிக்கட்டில் சாதிப் பெயர்களை கூற தடை..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!!