1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:10 IST)

தமிழகத்திற்கு, 37,907 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

MK Stalin PM Modi
தமிழகத்திற்கு 37,907 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் தேவை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதம் 3,4 தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 17, 18 தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாகவும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் ரூ.37,970 நிவாரணம் தமிழக அரசு கோரி உள்ளது. சென்னை உள்பட நான்கு மாவட்ட மறு கட்டமைப்புக்கு 19,692 கோடியும் நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு 18,214 கோடியும்  தேவை என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


புயல் பாதிப்பினை மத்திய குழுவினர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஆய்வு குழு பார்வையிட்ட நிலையில் மத்திய அரசிடம் இருந்து இன்னும் நிவாரணம் வரவில்லை என்றும் விரைந்து நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிகள் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva