1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (07:12 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Rain
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும், அந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறிய 8 மாவட்டங்கள் பெயர் இதோ:
 
1. செங்கல்பட்டு
2. கடலூர்
3. விழுப்புரம்
4. அரியலூர்
5. தஞ்சை
6. திருவாரூர்
7. மயிலாடுதுறை
8. நாகை
 
Edited by Siva