வெள்ளி, 4 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (17:51 IST)

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

Boiled eggs
முட்டை வழங்கவில்லை என  சத்துணவு ஊழியர்கள் மீது மாணவர் புகார் அளித்த நிலையில், அந்த மாணவரை பெண் சத்துணவு ஊழியர்கள் சேர்ந்து துடைப்பத்தால் அடித்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பள்ளியில், மாணவர் ஒருவரை சரமாறியாக துடைப்பத்தால்  சத்துணவு சமையல் ஊழியர்கள் லட்சுமி மற்றும் முனியம்மாள் தாக்கியதாகவும், இதனை அடுத்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படவில்லை என மாணவர் புகார் கூறியதால், அந்த மாணவர் மீது ஆத்திரம் அடைந்து இந்த இரண்டு சத்துணவு ஊழியர்களும் தாக்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இரண்டு ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran