ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (21:29 IST)

தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் பிரபல Adidas நிறுவனம்

adidas
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னையில்  உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும்  ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பில் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம், தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை அமைக்கவுள்ளது.

சீனாவிற்கு வெளியே ஆசியாவிலேயே முதல் மையம் இது என்று கூறப்படுகிறது. இதில் இருந்து உலகம் முழுவதும் காலணிகளை ஏற்றுமதி செய்யும் என தகவல் வெளியாகிறது.