1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (18:25 IST)

திருநங்கைகளுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்டாக காவலர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கு ரூபாய் 2000 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2956 திருநங்கைகள் இந்த அறிவிப்பு காரணமாக பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம் குறித்த அறிவிப்பை இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது குடும்ப அட்டை வைத்திருக்கும் திருநங்கைகளுக்கு ரூபாய் 2000 என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது