ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (13:54 IST)

ரூ.250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை - தமிழக அரசு அறிவிப்பு!

இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். 
 
அதாவது, தென்சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சிறப்பு மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும் என்றும் மதுரையில் 770 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
அதேபோல் திருவாரூரில் 730 கோடியில் புதிய நெல் கொள்முதல் கிடங்கு, உலர்களங்கள் அமைக்கப்படும் என்றும் திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புகிடங்கு அமைக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.