திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (14:20 IST)

காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000; முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
மகளிருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை அடுத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பயணம் என்று அறிவித்தார். மேலும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக காவல்துறையினருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அடுத்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது 
 
கோவிட்-19 காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்! அவர்தம் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.