தொடர்புடைய செய்திகள்
- குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி.. கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு..!
- மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்தது..!
- கனடாவுடன் இணைந்து செயல்படுங்கள்! – இந்தியாவிற்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு!
- சில்க் ஸ்மிதாவை பார்த்ததில் மகிழ்ச்சி- நடிகர் விஷால் ஓபன் டாக்
- 'மார்க் ஆண்டனி' ரூ.100 கோடி வசூல்.. நடிகர் விஜய்க்கு நன்றி..இது நியாயமான வெற்றி- நடிகர் விஷால்
ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்: மேல்முறையீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!
மகளிர் உரிமை திட்டம் ஆயிரம் ரூபாய் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுமார் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
ஆனால் இன்னும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலருக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாமா அல்லது ஆயிரம் ரூபாய் வரும் என்று காத்திருக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
வட்டாட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
