செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (17:10 IST)

'மார்க் ஆண்டனி' ரூ.100 கோடி வசூல்.. நடிகர் விஜய்க்கு நன்றி..இது நியாயமான வெற்றி- நடிகர் விஷால்

Mark antony
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  விஷால். இவர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் குவித்து வருகிறது.

இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி படம் வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இப்படத்தின் வெற்றி விழா இன்று நடந்து வரும் நிலையில், விழாவில் பேசிய நடிகர் விஷால்,  ''மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஆரம்பத்திற்கு காரணமான நடிகர் விஜய், காத்தி, டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோருக்கு என் நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ''தடைகள் எனக்குப் பழகிவிட்டது. மார் ஆண்டனி படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இது நியாயமான வெற்றி; பகத்சிங், கஜினி முகமது ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள், அவர்களைப் போல 16 வருடம் கழித்து வெற்றி பெற்றுள்ளேன். நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலையில் ரூ.1 ஐ தமிழ் நாடு விவசாயிகளுக்கு செலவிடுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.