திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (18:02 IST)

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தொடங்குவது எப்போது?

college students
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன 
 
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இதுவரை 90 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்துக்கு தேர்வாகி உள்ளதாகவும் மாதம் ரூபாய் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 என்ற திட்டம் மாணவிகளுக்கு மிகப்பெரிய பயனை கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது