கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: ரூ.17 லட்சம் கொள்ளை போனதாக தகவல்!
பஞ்சாப் மாநிலத்தில் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 17 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்கோடு என்ற பகுதியில் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது
இந்த இயந்திரத்தை நள்ளிரவில் கேஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளை அடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ள நிலையில் அந்த ஏடிஎம் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
கேஸ் கட்டர் மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது