வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (11:36 IST)

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி! – என்ன பாதிப்பு ஏற்படும்?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது டாலர்களில் சம்பளம் பெறும் என்.ஆர்.ஐகளுக்கு ஒருவிதத்தில் நிம்மதியை அளித்தாலும், உள்நாட்டு தொழில்நிறுவனங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

இந்நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ.80.11 ஆக உள்ளது. தொடர்ந்து டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதும், ரூபாயின் வீழ்ச்சியும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக உள்ளன.

இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பன்னாட்டு வணிகத்தில் இந்திய வணிகத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாது உள்நாட்டு வணிகத்திலும் குறிப்பிடத்தக்க சில பொருட்களின் விலை உயரும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.