1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (13:37 IST)

தொடர் தோல்வி எதிரொலி: ரூ.80 கோடி சம்பளத்தை குறைத்த நடிகர்

Akshay
தன்னுடைய படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதை அடுத்து 100 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நடிகர் ஒருவர் 80 கோடி ரூபாய் சம்பளத்தை குறைத்து 20 கோடி ரூபாய் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் கடந்த சில ஆண்டுகளாக 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் அவரது படங்கள் சமீபகாலமாக தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் தன்னுடைய படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவதன் காரணமாக அக்ஷய் குமார் தனது சம்பளத்தை 100 கோடியிலிருந்து 20 கோடியாக குறைத்துக்கொள்ள அதிரடி முடிவு எடுத்துள்ளார் 
 
20 கோடி ரூபாய் தயாரிப்பாளர் சம்பளம் தந்தால் போதும் என்றும் படம் வெற்றி பெற்றால் லாபத்தின் ஒரு பகுதியை கொடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அக்சயகுமாரின் இந்த மாற்றத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மற்றும் கொள்கை