1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. After corona, the first election today at Bihar

கொரோனா பரவலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் முதல் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகார்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் 
 
இந்த நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக இன்று பீகார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது 
 
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கூட்டணிகள் போதும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
ஆக்டிவ் கேஸ்கள் ஒரு லட்சம் மட்டுமே: உலக கொரோனா நிலவரம்