செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:47 IST)

ஓட்டு போட்டது யாருக்கு? வாக்களித்த பின் வெளியே வந்த டிரம்ப் பேட்டி

அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு முழுவதும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெறுகிறது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப் புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்தார். புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் உள்ள நூலகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் டிரம்ப், தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பொதுவாக முகக்கவசம் அணிவதை டிரம்ப் விரும்ப மாட்டார். ஆனால் வாக்களிக்க வந்த போது முக கவசம் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘டிரம்ப் என்ற நபருக்கு தான் வாக்களித்ததாக தெரிவித்திருந்தார் 
 
நாடு முழுவதும் வரும் நவம்பர் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதிபர் டிரம்ப் தற்போது தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்பின்படி இந்த முறை டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது