1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Director Bharathiraja Health Update: Hospital Confirms He is Stable!

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

bharathiraja
தமிழ் சினிமாவின் இமயம் என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, வயது முதிர்வு மற்றும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மருத்துவமனை நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், "இயக்குநர் பாரதிராஜாவுக்குத் தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது; அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், அவர் சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும், ரசிகர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
 
70-களில் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த பாரதிராஜா, இன்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது உடல்நலம் குன்றிய செய்தி கேட்டதும் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
என்.டி.ஏவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? நடிகை கெளதமி பேட்டி..!