1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bharathi raja wants his body buried in form house

எனக்காக நீ இத பண்ணனும்!.. பாரதிராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்!..

bharathiraja
16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டவர் இயக்குனர் பாரதிராஜா. அதன் பின் இவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், டிக்
டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிர்வல்களை ஏற்படுத்தியது. அதேபோல் அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற சிறப்பான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார்.
 
கோலிவுட்டில் சினிமா பின்னணி இல்லாதவர்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் இயக்குனர் ஆகி விட முடியாது என்கிற கருத்தை உடைத்தவர் பாரதிராஜா. அவருக்கு பின் பலரும் பல ஊர்களில் இருந்தும் நம்பிக்கையோடு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து வெற்றி பெற்றும் காட்டினார்கள். 
 
ஒரு தலைமுறைக்கான இயக்குனராக இருந்த பாரதிராஜா நேற்று அதிகாலை தனது சென்னையில் உள்ள வீட்டில் காலமானார். அவரின் தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.  மகன் மனோஜின் மறைவிற்குப் பின் சிங்கப்பூரில் உள்ள தனது மகள் ஜனனி வீட்டில் சில மாதங்கள் இருந்தார் பாரதிராஜா.
 
அப்போது ‘நான் இறந்தால் எனது உடலை நமது பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய வேண்டும்’ என தனது மகளிடம் கேட்டுக் கொண்டாராம். இதனால்தன் பாரதிராஜாவின் உடலை சென்னையிலேயே தகனம் செய்யலாம் என பலரும் சொல்லியும் கேட்காமல் அவரின் மகள் ஜனனி பாரதிராஜாவின் ஆசைப்படியே தேனியில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். இன்று மாலை 3 மணி அளவில் பாரதிராஜாவின் உடலுக்கு உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
உங்களை நேசிக்க கத்துக்கோங்க!.. உங்களுக்காக வாழுங்க!.. மக்களுக்கு பாரதிராஜா சொன்ன அட்வைஸ்!...