வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (14:43 IST)

ஜெட் வேகத்தில் தொற்று: ராயபுரத்தில் ஏன் இந்த நிலை?

சென்னை ராயபுரத்தில் தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்க மக்கள் நெரிசல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 
 
நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231, திரு.வி.க. நகரில் 1032, தண்டையார்பேட்டையில் 823, அண்ணா நகரில் 719, வளசரவாக்கத்தில் 605 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
ராயபுரத்தில் தொற்று குறையாமல் இருக்க மக்களின் அஜாக்கிரதையே காரணம் என கூறப்படுகிறது. அந்த பகுதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால் உள்ளுக்குள் மக்கள் மாஸ்க் அணியாமல் சமுக விலகலை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். 
 
அதோடு ராயபுரம் குறுகிய தெருக்களில் அதிக வீடுகளையும், வீடுகளில் அதிக மக்களையும் கொண்டுள்ளதால் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவது சவாலாக உள்ளதாக தெரிகிறது.