பேருந்து வசதி வேணுமா? இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 22 மே 2020 (11:55 IST)
பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால் அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் மொபைல் எண்களை அறிவித்துள்ளது.

 
அரசு பணியார்கள் 50% பேர் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் படி மே 18 ஆம் தேதி முதல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல தனியார் நிறுவனங்களும் செயல்பட துவங்கியுள்ளது. 
 
அலுவலகங்கள் இயங்க் அதுவங்கிய போதும் பணியாளர்கள் செல்வதற்கு வசதியாக மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே, பெருந்து சேவை தேவைபடும் பட்சத்தில் வேலைக்கு செல்வோர் தங்களை அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
 
அதாவது, 944503050 மற்றும் 9445030523 ஆகிய எண்களிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும். 


இதில் மேலும் படிக்கவும் :