திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (13:07 IST)

ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு....

போலீசார் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவாகியுள்ள விவகாரம் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, சென்னை மாங்காடு பகுதியில் கடந்த பிப். 6ம் தேதி ரவுடிகள் புடை சூழ அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அங்கு போலீசார் சென்ற போது அவர் தப்பி சென்றாலும், பின் நெருக்கடி காரணமாக பினு போலீசாரிடம் சரணடைந்தார். அதன்பின் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அதேபோல், பினுவின் பரம எதிரியான ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனும், அவனின் கூட்டளிகளும் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ராதாகிருஷ்ணனுன் குருவும், வட சென்னையை ஆட்டிப் படைத்த ரவுடியுமான நகேந்திரன் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.  
 
சிறைக்கு வந்துள்ள பினு தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக கருதும் ராதாகிருஷ்னன், சில ஆட்கள் மூலம் அதை நாகேந்திரனிடம் கூறியுள்ளான். இதனால், பினுவை தனது ஆட்கள் மூலம் சிறையிலேயே தீர்த்துக்கட்ட நாகேந்திரன் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் அப்போது வெளியானது. ஆனால், பினுவிற்கு ஜாமீன் கிடைக்கவே அவர் வெளியே வந்து விட்டார்.
 
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே போலீஸ் நிலையத்தில் வந்து பினு கையெழுத்து போடவில்லை. எனவே, அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
 
பினு தலைமறைவான விவகாரம் போலீசாருக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.