திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (20:14 IST)

மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் கிடைத்தது!

மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
 
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை ஆத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், இதே எட்டு வழிச்சாலை எதிர்ப்பு வழக்கில் கைதான பியூஷ் மனுஷுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதனால் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில், இவருக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.