தொடர்புடைய செய்திகள்
- எஸ்.வி.சேகருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.. மன்சூர் அலிகானுக்கு ஜெயிலா - கொந்தளிக்கும் பாரதிராஜா
- வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
- அரசுக்கு எதிராக பேசினா ஜெயில் தான் - சுட்டிக் காட்டும் மன்சூர் அலிகானின் கைது
- சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது
- தள்ளுபடி விலையுடன் அறிமுகமானது ரெட்மி வை2: விவரம் உள்ளே...
மன்சூர் அலிகானின் ஜாமின் மனு தள்ளுபடி
சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருக்கும் மன்சூர் அலிகானின் ஜாமின் மனுவை அத்தூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை சற்றும் பொருட்படுத்தாத மாநில அரசு நிலத்தை கையக்கபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேசிய மன்சூர் அலிகான், இத்திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, அரசியல்வாதிகள் மட்டுமே கல்லா கட்டுவார்கள் எனவும் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார்.
இதனால் சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த ஆத்தூர் நீதிமன்றம் மன்சூர் அலிகானின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
