1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (20:03 IST)

வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில், வேல்முருகன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி நெய்வேலி தெர்மல் போலீஸார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
இதற்கிடையே, இந்த இரு வழக்குகளில் இருந்து ஜாமீன் கேட்டு வேல்முருகன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன் கைது செய்யப்பட்டிருக்கும் 2 வழக்குகளிலும் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.