1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (13:01 IST)

ஏன் எனக்கு ஜாமின் குடுக்கல? சேலம் சிறையில் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருக்கும் மன்சூர் அலிகானின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை சற்றும் பொருட்படுத்தாத மாநில அரசு நிலத்தை கையக்கபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேசிய மன்சூர் அலிகான், இத்திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, அரசியல்வாதிகள் மட்டுமே கல்லா கட்டுவார்கள் எனவும் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார்.
 
இதனால் சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  நேற்று மன்சூரின் ஜாமின் மனுவை ஆத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இதனையடுத்து மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி தற்பொழுது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.