திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை தீர்ப்பு! பெரும் எதிர்பார்ப்பு..!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தீபத் திருவிழா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை மிக முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது.
முன்னதாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய உத்தரவில், கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் பக்தர்களின் உரிமைகள் குறித்து சில குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
இந்த உத்தரவு கோவிலின் நிர்வாக நடைமுறைகளில் தலையிடுவதாக கருதி, தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் வாத பிரதிவாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை இறுதி தீர்ப்பை அறிவிக்கப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா என்பது தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்று என்பதால், இந்த தீர்ப்பு பக்தர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva