1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rowdy baby surya again arrested

ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது.. பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்..!

ரவுடிபேபி
டிக்டாக்கில் ஆபாசமாக, முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்,.
 
யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த சேர்ந்த பெண் சித்ரா.  இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது
 
இது குறித்து சித்ரா, மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாநகர் சைபர் கிரைம்  போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர். 
 
சிக்கா மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகிய இருவரும் ஏற்கனவே இன்ன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் இருந்து அதன் பின்னர் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தீபாவளி போனஸ்.. போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கை..!