திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (13:13 IST)

தேசியப் பங்கு சந்தை எமெர்ஜ் தளத்தில் பட்டியலிடப்படும் விஷ்ணுசூர்யா பிராஜெக்ட்ஸ்!

தேசியப் பங்கு சந்தை எமெர்ஜ் தளத்தில் பட்டியலிடப்படும் விஷ்ணுசூர்யா பிராஜெக்ட்ஸ். ஏறக்குறைய 50 கோடி ரூபாயை பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) திரட்டியது.
தென்னிந்தியாவில் கட்டுமானப்பணி, உட்கட்டமைப்பு உருவாக்கம், சுரங்கப்பணி மற்றும் திரட்டல் பணிகள் ஆகிய தளங்களில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக சென்னையை சேர்ந்த  விஷ்ணுசூர்யா பிராஜெக்ட்ஸ் & இன்ஃப்ரா லிமிடெட் இயங்கிவரும் நிலையில், என்எஸ்ஈ (தேசியப் பங்கு சந்தை) எமெர்ஜ் தளத்தில் ஒரு பங்கிற்கு ரூ. 76 என்ற விலையில் தனது செயல்பாட்டை அது தொடங்கியிருக்கிறது. இதன் பங்கு வெளியீடு விலையான ரூ. 68 என்பதை விட ஏறக்குறைய இது 12% அதிகமாகும்.

இந்நிறுவனத்தின் ஐபிஓ என்ற புதிய பங்கு வெளியீடு 2023, செப்டம்பர் 29, வெள்ளி அன்று தொடங்கி அக்டோபர் 5, வியாழனன்று நிறைவடைந்தது. 73,50,000 சமப்பங்குகள் என்ற புதிய பங்கு வெளியீட்டை கொண்டிருந்த இந்த ஐபிஓ – க்கு 44 மடங்குகள் என்ற அளவிற்கு மிக பிரம்மாண்டமான சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்திருந்தது. 31,44,000 பங்குகள் என்ற அளவிற்கு பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தை வர்த்தகத்தில் கைமாறின. தனது ஐபிஓ – ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த இந்நிறுவனம் அதன் மூலம் ரூ. 49.98 கோடி நிதியை திரட்டியிருக்கிறது.

பங்கு வெளியீட்டின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு தனது நடப்பு மூலதன தேவைகளை பூர்த்தி செய்யவும் மற்றும் நீண்டகால கடன்களை முழுமையாக அல்லது பகுதியளவு திரும்பச்செலுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் கடன், சமப்பங்கு விகிதம் என்பது ஏறக்குறைய ஒன்று - க்கு நெருக்கமாக இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த நிதியாண்டில் (2022-23) இந்நிறுவனம் ரூ. 135 கோடி என்ற விற்றுமுதலை பதிவு செய்திருக்கிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டிற்கு தன்வாலா செக்யூரிட்டிஸ் லிமிடெட் முதன்மை மேலாளராகவும், சஃப்ரான் கேபிடல் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டிரான்ஸ் கார்ப்பரேட் அட்வைசர் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ செயல்பாட்டின் ஆலோசகர்களாகவும் செயலாற்றின.

விஷ்ணுசூர்யா பிராஜெக்ட்ஸ் நிறுவனம் 1996 – ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். கட்டுமானம் மற்றும் பொறியியல் தொழில்துறையில் பல ஆண்டுகள் கூட்டு அனுபவத்தை இது கொண்டிருக்கிறது. சுரங்கப்பணி செயல்பாடுகளிலும் இந்நிறுவனம் கணிசமான செயலிருப்பை பெற்றிருக்கிறது. நீர்வளம், இரயில், போக்குவரத்து, ஆதாரவளங்கள் மற்றும் அமைப்பு ரீதியான  உருவாக்கம் உட்பட அனைத்து முக்கிய தொழில்துறைகளிலும் EPC (கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு) செயல்திட்டங்களிலும்  இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது. திறமையும், அனுபவமும் வாய்ந்த 300 திறன்மிக்க தொழில்முறை பணியாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மாநிலத்தில் வலுவாக காலூன்றியிருக்கும் இந்நிறுவனம், நீடிப்புத்தன்மையுள்ள வளர்ச்சியில் சிறப்பான கடந்தகால வரலாற்று பதிவையும், வலுவான பேலன்ஸ் ஷீட்டையும், உறுதியான ரொக்கச்செலாவணி நிலையையும், விரிவான ஆதாரவளங்களையும் பெற்றிருக்கிறது. சவால்மிக்க உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரிய EPC செயல்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கடந்தகால பதிவின் வழியாக வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப திரும்ப ஆர்டர்களை இந்நிறுவனம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ஐபிஓ – புதிய பங்கு வெளியீடுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு  மற்றும் வரவேற்பிற்காக முதலீட்டாளர்களுக்கு தங்களது மனமார்ந்து நன்றியை இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு. எஸ். நீலகண்டன் மற்றும் திரு. வி. சனால் குமார் தெரிவித்தனர், தொழில், வர்த்தகம் மற்றும் உருவாக்கம், மேம்பாடு உருவாக்கம் மற்றும் குடியிருப்பு அமைவிடங்கள் ஆகிய பிரிவுகளில் புதிய செயல்திட்டங்களின் வலுவான தொகுப்பை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் பேசுகையில், “கட்டுமானப்பணியில் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்கள் குழு, சேவை வழங்குநர்கள்,

ஒப்பந்ததாரர்கள், சப்ளையர்கள் மற்றும் சிறப்பு ஆலோசகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அர்ப்பணிப்புமிக்க ஒருங்கிணைந்த குழுவாக நாங்கள் செயல்படுகிறோம். வேறுபட்ட பல சந்தை பிரிவுகளில் பல முக்கியமான உட்கட்டமைப்பு வசதி கட்டுமாணப்பணிகள் மற்றும் செயல்திட்டங்களை கடந்த பல ஆண்டுகளில் நாங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறோம்; சொத்து உருவாக்கம், சிவில் உட்கட்டமைப்பு வசதி, புதிய அமைவிடங்களை உருவாக்கல், சிறந்த பணி மற்றும் ஒன்றுதிரட்டல் பணிகளுக்கான பிரிவு என வெவ்வேறு பிரிவுகளில் விரிவான அனுபவமும், பரிச்சயமும் எங்களுக்கு இருக்கிறது. பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்டிருக்கும் நிதி, எமது செயல்பாடுகளை மேலும் தொடர்ந்து விரிவாக்க எங்களுக்கு உதவும். இதன் மூலம்  வரும் ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான நிதிசார் முடிவுகளை பெறுவதிலும் மற்றும்  சாதனைகளை நிகழ்த்துவதிலும் நாங்கள் உறுதியான குறிக்கோளைக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.