செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:22 IST)

சென்னையில் பள்ளம் ஏற்பட்டுள்ள சாலைகளின் விபரங்கள்!

சென்னையில் பள்ளம் ஏற்பட்டுள்ள சாலைகளின் விபரங்கள்!
சென்னையில் கனமழை காரணமாக ஒரு சில சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் பள்ளம் காரணமாக போக்குவரத்து மாற்றம் ஏற்பட்ட பகுதிகள் பின்வருவன
 
திருமலைப்பிள்ளை சாலை, காமராஜர்‌ இல்லம்‌ முன்பு சாலையில்‌ பள்ளம் ‌ஏற்பட்டுள்ளது. இதனால்‌ வள்ளுவர்‌ கோட்டம்‌ நோக்கி வாகனங்கள்‌ செல்ல அனுமதியில்லை. 
 
வாணிமஹால்‌-பென்ஸ்பார்க்‌ சந்திப்பில்‌ வாகனங்கள்‌ திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர்‌ கோட்டத்தில்‌ இருந்து வாணிமஹால்‌ செல்லும்‌ வாகனங்கள்‌ திருமலைப்பிள்ளை ரோட்டில்‌ செல்லலாம்‌.
 
அதேபோல் மந்தைவெளி பகுதியிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன