புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:08 IST)

மக்களே பயனடைவீர்!! இன்று சிறப்பு மருத்துவ முகாம்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு தொடர் மழை காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் இருந்தது. 
 
இந்நிலையில் இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டையில் இந்த சிறப்பு முகாமை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல்நல பாதிப்புகளும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையும் மருந்துகளும் வழங்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.