1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:04 IST)

சென்னையில் மூடப்பட்டுள்ள 7 சுரங்கப்பாதைகள் எவை எவை?

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது என்பதும் ஒரு சில சுரங்க பாதைகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னையில் நேற்று பதினோரு சுரங்க பாதைகள் மூடப்பட்டு இந்த நிலையில் இன்று 7 சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது மூடப்பட்டுள்ள 7 சுரங்க பாதைகளை முழு விபரங்கள் இதோ:
 
1. வியாசர்பாடி சுரங்கபாதை
2. கணேஷபுரம்‌ சுரங்கபாதை
3. அஜாக்ஸ்‌ சுரங்கபாதை
4. மேட்லி சுரங்கபாதை
5. துரைசாமி சுரங்கபாதை
6. அரங்கநாதன்‌ சுரங்கபாதை
7. காக்கன்‌ சுரங்கபாதை ( இருசக்கர வாகனம்‌ மற்றும்‌ ஆட்டோ)