ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (10:11 IST)

டி-20 உலகக்கோப்பையின் இந்திய அணியில் கேப்டன் யார்? ஜெய்ஷா தகவல்

jaisha
சமீபத்தில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடின.
 

இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இந்தியா வெற்றது.  இந்த நிலையில் டி-20 உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ளது.

இதில், இந்திய அணி யார் தலைமையில் களமிறங்கவுள்ளது என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து செய்தியாளர்கள் ஜெய்ஷாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, தென்னாப்பிரியா அணிகள் இடையிலான டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.