தொடர்புடைய செய்திகள்
- கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
- மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் பதில்..!
- ஜாமீன் இல்லை.. செந்தில் பாலாஜி மனுவை திரும்பப் பெற அனுமதி: அடுத்து என்ன நடக்கும்?
- பெரிய மனசும் திறமையும் உங்களிடம் உள்ளது- உதயநிதிக்கு வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்
- உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? அவரே அளித்த பதில்..!
சனாதன வெறுப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன வெறுப்பு விவகாரம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனிநபர் வழக்கு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆனால் அதே நேரத்தில் சனாதன வெறுப்பு பேச்சு விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சனாதன குறித்து வெறுப்பு பேச்சால் ஏற்படும் வன்முறையை தடுக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
