1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (16:12 IST)

பைஜூஸ் நிறுவனத்திற்கு ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை

byjus
பைஜூஸ்  நிறுவனத்திற்கு  ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

கடந்த 2011 -2012 ஆம் ஆண்டு பைஜூ ரவீந்திரன், திவ்யா கூகுல்நாத் ஆகியோரால் உருவாக்கப்பட்ட செயலி பைஜூஸ். இது இந்தியாவில் மாணவர்கள், கல்லூரி மாணவர்களை தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பிரத்யேக ஆசிரியர்களை கொண்டு தயார்படுத்தும் செயலியாக அறியப்படுகிறது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி முதலீட்டை வெளி நாட்டு நிதி சட்டத்தை மீறி பெற்றதாக பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை  ரூ.9 ஆயிரம் கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.