திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (12:23 IST)

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


 
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. 
 
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.கே. நகர் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷையே இந்த முறையும் வேட்பாளராக களம் இறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
 
ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ‘ஜனநாயகப்படி தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. மற்ற கட்சியினரிடம் எங்களுக்கு ஆதரவு கேட்போம்’ என அவர் தெரிவித்தார்.