திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:50 IST)

ஃபேஷன் டிசைனரை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல சீரியல் நடிகர்

பிரபல டிவி நடிகர் பியூஷ், 23 வயது ஃபேஷன் டிசைனரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஹத் உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பியூஷ் சஹ்தேவ் வயது 35. 23 வயது ஃபேஷன் டிசைனரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 27ம் தேதி வரை அவரை ஜாமீனில் விடுவிக்கப்போவதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
பியூஷுக்கும் வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பை அறிந்தே அவரின் மனைவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு  பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஃபேஷன் ஷோ ஒன்றுக்கு சென்ற இடத்தில் பியூஷுக்கு ஃபேஷன் டிசைனர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக அவர் அந்த பெண்ணுடன் திருமணம் ஆகாமலேயே கணவன், மனைவி போன்று வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பியூஷின் செல்போனில் வேறு ஒரு பெண்ணின்  புகைப்படத்தை பார்த்து, யார் என்று கேட்டதற்கு அவர் அந்த ஃபேஷன் டிசைனரை பிரிந்துள்ளார்.
 
ஃபேஷன் டிசைனர் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்க, அது எல்லாம் முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார் பியூஷ்.  மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டு தனது கணக்கை யாரோ ஹேக்  செய்துவிட்டார்கள் என்று கூறி நாடகமாடியுள்ளார். இதனால் அந்த பெண் மும்பை போலீசில் பியூஷ் மீது புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பியூஷை கைது செய்தனர்.