1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (00:05 IST)

வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம்

கரூர் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் - அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர்.
 
 
தமிழக அளவில் கொரோனா மூன்றாம் அலையாக உருமாறி ஓமிக்ரோன் என்கின்ற வைரஸ் தாக்கம் கடுமையாக தாக்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்று பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு வரும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு நாளை அமுல்படுத்த உள்ள நிலையில் இன்று  கரூர் கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் அதிக அளவில் பொது மக்கள் காய்கறி வாங்க குவிந்ததால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் முகக் கவசம் அணியாமல் காய்கறிகளை வாங்கிச் சென்று விடுகின்றனர் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையாக உள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது