பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை செய்ததாக கூறப்படும் நிலையில், இதனை அடுத்து அவர் பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த தகவலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய போது, "எதிர்க்கட்சி தலைவர்கள் தாங்கள் நினைப்பதை யூகித்து வதந்தியாக பரப்பி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். ஆனால், அந்த ஆலோசனையில் கட்சி வளர்ச்சி மற்றும் பஞ்சாப் மாநில வளர்ச்சி மட்டுமே பேசப்பட்டது.
எதிர்க்கட்சி கூறும் போல், பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ஏற்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டினார் என்ற வதந்தியில் எந்தவித உண்மையும் இல்லை.
டெல்லியை பொருத்தவரை, ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் பணியை தொடரும். அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை கட்டமைக்கும் பணியில் முன்பை விட தீவிரமாக ஈடுபடுவார்" என அவர் தெரிவித்தார்.
Edited by Siva