தக்காளி ரூ.120; காய்கறிகள் விலை 10 முதல் 15% உயர்வு!!
மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை 10 முதல் 15% உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
தக்காளி ஒரு கிலோ ரூ.80 - ரூ.100 ஆக நேற்று இருந்த நிலையில் இன்று ரூ,120 ஆக உயர்ந்துள்ளது. இதே போல ஒரு கிலோ வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.60. வெண்டைக்காய் ரூ.60, பீன்ஸ் ரூ.45, அவரைக்காய் ரூ.60, கேரட் ரூ.55, பீட்ரூட் ரூ.40, செளசெள ரூ.25, நூக்கல் ரூ.50, முட்டைகோஸ் ரூ.20, உருளைகிழங்கு ரூ.25 ஆக உள்ளது.
இந்த விலை அனைத்தும் நேற்றையை விலையை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.